• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக, குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

Byகுமார்

Mar 15, 2024

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில்
யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு ) சார்பாக குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக மாணவி சோப்பியா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் செ.ராஜு தலைமை வகித்தார் கல்லூரி செயலாளர் R.V.N கண்ணன் மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் க.ப.நவநீதகிருஷ்ணன் முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர் சிறப்புரையாற்றினார். மேலும் வணிகவியல் துறை தலைவர் முனைவர் M.குணசேகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார், சிறப்பு விருந்தினர் டாக்டர் இராமகிருஷ்ணன் குடி மற்றும் போதை விழிப்புணர்வு பற்றிய செயல்பாடுகளை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக மாணவி கிருத்திகா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வை வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் இந்துமதி, நவநீதகிருஷ்ணன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, ராமர்,கலை கதிரவன், கார்த்திகாலட்சுமி, கோகிலா, சுந்தரேசன், விஜயகுமார், குணா மற்றும் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்