• Mon. Apr 29th, 2024

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்

ByP.Thangapandi

Mar 15, 2024

உசிலம்பட்டி நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களை புறக்கணிப்பதாக – நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் அவசர சிறப்பு கூட்டமாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அரசு முதன்மை செயலளர்கள் ஆணைப்படி கடந்த 1 ஆம் தேதி முதல் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வணிக வளாக கடைகள் அடங்கிய 7 ஏக்கர் 85 செண்ட் நிலத்தை நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் குடிநீரை முறையாக தடையின்றி வழங்க வேண்டும் என்ற நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அதிமுக கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தாலும் 2 ஆண்டுகளாக அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என்றும், அதிமுக கவுன்சிலர்களை அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்., மேலும் சேர்மனும், திமுகவிலிருந்து அதிமுகவிற்கு சென்றதால் அவரது பேச்சையும் அதிகாரிகள் கேட்பதில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *