• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

Byதரணி

Apr 16, 2023

சிவகாசியில் அதிமுக சார்பாக கோடை கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவருமான லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நீர், மோர், தண்ணீர் பழம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சரவணக்குமார், சாம்(எ)ராஜ அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், கவுன்சிலர்கள் கரைமுருகன், ஜெகத்சிங்பிரபு, தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, சிவகாசி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டி, சிவகாசி ஒன்றிய கழக இணை செயலாளர் இளநீர் செல்வம், மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா, நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு மாயாண்டி, சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.