• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

செக்காணூரணியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம்

ByP.Thangapandi

Aug 24, 2024

மதுரை அருகே செக்காணூரணியில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட 64 சமுதாய மக்களை கல்வி ரீதியாக முன்னேற்றும் வகையில் 1920 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது கள்ளர் சீரமைப்புத்துறை, இத்துறையின் கீழ் தென்மாவட்டங்களில் சுமார் 250 க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன., மேலும் 50 க்கும் மேற்பட்ட விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு பள்ளக் கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் இன்று மதுரை மாவட்டம் செக்காணூரணி பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், அதிமுகவின் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.