தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், டீ.நு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். ஜூலை 7ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும். தரவரிசை பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.