

ஆம்னி பஸ்களுக்கான கட்டண விபரங்களை நிர்ணயம் செய்து ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.
திபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனை பல வழிகளிலும் தடுக்க முயற்சித்தும் முடியவில்லை. இந் நிலையில் ஆம்னி பேருந்துகள் சங்கம் கட்டண விபரங்களை அறிவித்துள்ளது.சென்னை- மதுரை ரூ690 முதல் 1940வரை, சென்னை -திருச்சி ரூ520 முதல் 1470வரை, சென்னை -நெல்லை ரூ900 முதல் 2580வரை,சென்னை – தூத்துக்குடி ரூ850 முதல் ரூ2450வரை, சென்னை – சேலம் ரூ530 முதல் ரூ1690வரை, சென்னை- ஊட்டி ரூ770 முதல் 2260வரை,சென்னை – ஈரோடு ரூ610 முதல் 1710 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முழு தகவல்களுக்கு www.aoboa.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.