• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது: நிபுணர் கருத்து

ByA.Tamilselvan

Apr 28, 2022

ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது என தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரவித்துள்ளார்.
இந்தியாவில் 6மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்
ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு அதிரடியாக 90 சதவீதம் அதிகரித்தது. 2 வாரங்களாக தினமும் பாதிப்பு கூடுகிறது. இது 4-வது அலை பற்றிய கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெருந்தொற்று நோயானது, வெறும் உயிரியல் மருத்துவ ரீதியிலானது அல்ல; அது பொருளாதாரம், அரசியல் சார்ந்ததும் கூட.டெல்டாவுடன் ஒப்பிடுகையில், புதிய அலையை நாடு காண்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், தொற்றை ஏற்படுத்துகிற வைரஸ்கள், ஒமைக்ரானில் இருந்து மாறுபட்டவை. ஒமைக்ரான் வைரசை காட்டிலும் பிஏ.2 வைரஸ், 2 முதல் 20 சதவீதம் வரையில் அதிக தொற்றை ஏற்படுத்தும்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளன. இதனால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பெரிய அலையும், ஒரு உருமாறிய வைரசுடன் தொடர்புடையது. ஆல்பா, டெல்டா வைரஸ்களை விட ஒமைக்ரான் அதிகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துள்ளது. அவர்களுக்கு இணைநோய் இல்லாதபோது, தொற்று பாதித்தாலும் சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகள்தான் இருக்கும்.
எனவே4 அலைக்கு ஒமிக்ரான் காரணமாக இருக்காது. என்று அவர் கூறினார்.