• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மூதாட்டி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது !!!

BySeenu

Mar 27, 2025

கோவையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி, தனியாக வசித்து வரும் இவர் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த வாலிபர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் மூதாட்டி என்றும் பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த வட மாநில தொழிலாளி தப்பி ஓட முயன்றான். அவனை சுற்றி வளைத்து அக்கம், பக்கத்தினர் பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவனிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக் 25 வயது என்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.