• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே மூதாட்டி கொலை.., குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…

ByKalamegam Viswanathan

Sep 22, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம், வீட்டில் தனியாக இருந்த காசியம்மாள் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடைய தென்காசி மாவட்டம், தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த செம்புலிங்கம் (23), தங்கமலை (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஜரா ஆர்.ஜிஜி, குற்றவாளிகள் செம்புலிங்கம் மற்றும் தங்கமலை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், மேலும் இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.