• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான்

ByA.Tamilselvan

Jul 16, 2022

எங்களை பொறுத்தவரை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் துரைமுருகன் பேச்சு
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்
அ.தி.மு.க அலுவலகம் சீல் வைப்புக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை. கவர்னர் சனாதன தர்மம் பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன். அதற்கு மாநகராட்சி கமிஷனரும், கலெக்டரும் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.