தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6. 99 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்காக அதிகாரிகள் சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது நியாயவிலைக் கடை அலுவலர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கும் பணிகள் நடைபெற்றது அனைத்து தரப்பு மக்களுக்கும் டோக்கன்களை அலுவலர்கள் அவர்களின் வீடு தேடி சென்று நேரில் வழங்கி வருகிறார்கள்.
எட்டாம் தேதி தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ள நிலையில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




