• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு..,

ByS.Ariyanayagam

Apr 12, 2026

கொடைக்கானல் எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது; தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

ஏற்கனவே, அப்பகுதியினர் எதிர்ப்பு காரணமாக இடிப்பு முயற்சியை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சுமார் 300 போலீசார் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.