• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தனியார் உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

ByKalamegam Viswanathan

Feb 6, 2025

மதுரை சோழவந்தானில் தனியார் உணவகத்திற்கு அதிகாரிகள் சீல். பொதுமக்கள் வரவேற்பு!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 20க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட மற்றும் வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சம்மந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட உணவகத்திற்கு சீல் வைத்தனர். சோழவந்தானில் தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.