• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களை உசிலம்பட்டி ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு

ByP.Thangapandi

May 11, 2024

பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள சூழலில் தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் என 32 பள்ளி வாகனங்களை இன்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம், உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முன்னதாக தீ மற்றும் விபத்து ஏற்பட்டால் மாணவ, மாணவிகளை பாதுகாப்பது குறித்தும், மாணவ மாணவிகளை ஏற்றும் போதும், இறக்கும் போதும் கடைபிடிக்க வேண்டிய விதிமிறைகள் குறித்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வாகனங்களின் நிலை, இருக்கைகள், கேமரா, ஓட்டுநர், உதவியாளரின் ஆவணங்கள் குறித்து சரி பார்க்கப்பட்டு., மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவு பள்ளி வாகனங்கள் உள்ளனவா என ஒவ்வொரு வாகனமாக ஏறி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.