• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின்
குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த யோ.முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன் கடந்த 13.11.2022 அன்று அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்த யோகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.