• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தொழில் பாதுகாப்புப் படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.., பணிச்சுமையா?குடும்பப்பிரச்சினையா போலீஸ் விசாரணை…

ByKalamegam Viswanathan

Dec 13, 2023

திருமங்கலத்தைச்சேர்ந்த தொழில் பாதுகாப்புப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலைக்கு பணிச்சுமையா குடும்பப்பிரச்சிணை காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார் .இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ரக்ஸின்(6), நிஷிதா (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக குமார் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவு எண்ணூர் துறைமுகம் காமராஜ் ஸ்டேஷன் சிக்னல் பாயின்ட்டில் குமார் பணியின் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை மத்திய தொழிற் பாதுகாப்பு படை உதவி அதிகாரி ராஜு ரோந்து சென்ற போது குமார் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கையில் துப்பாக்கி பிடித்தவாறு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில், மீஞ்சூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் குமார் நேற்று இரவு பணியில் இருந்த போது தான் கையில் வைத்திருந்த இன்சாஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வந்தார். தந்தை பெயர் அழகுமலை
இவரது சகோதரர் வீரக்குமார் திருமங்கலம் நகராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர்கள் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்வதற்கு முன் இருவரும் செல்போனில் பேசி சண்டையிட்டதாகவும் வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.இவர் தற்கொலைக்கு பணிச்சுமையா ,குடும்பப்பிரச்சினை காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.