அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அவரை ஆதரித்து பேசினார்.
தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் எடப்பாடி கையே ஓங்கியுள்ள நிலையில் பாஜக அல்லது அமமுகவில் விரைவில் சேர்வார் என அரசியர் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?








