• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

காதலனுக்காக சிபாரிசு செய்த நம்பர் நடிகை!

டாப் நடிகர காதலர் இயக்க காரணமே நம்பர் நடிகை தான்-ன்னு கோலிவுட்டுல பேச்சுகள் அடிபட்டு வருது! பெரிய நடிகர்கள இயக்க முடியலயே என புலம்பி வந்த அவருக்கு அந்த வாய்ப்ப ஏற்படுத்தி கொடுத்ததே நடிகை தான்-ன்னு சொல்றாங்க!

நிச்சயதார்த்தம் மாதிரியே திருமணத்தையும் ரகசியமா முடிச்சிட்டாங்களான்னு ரசிகர்கள் கேட்குற அளவுக்கு தன்னோட பர்சனல் வாழ்கையை நம்பர் நடிகையும், அவரோட காதலரும், ரொம்ப சீக்ரெட்டா பாதுகாத்துட்டு வராங்க!

காதலருக்கு தொழில் ரீதியா ஏகப்பட்ட பிசினஸ் ஐடியாக்கள கொடுத்து வருவதே நம்பர் நடிகை தான்-ன்னும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமாவ தாண்டி ஏகப்பட்ட பிசினஸ்களயும் துவங்கி ரகசியமாக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. சம்பாதிக்கும் பணத்த உபயோகமாக செலவு செய்வதும் பெருக்குவதும் நல்ல விஷயம் தானே என பலர் இவங்கள பாராட்டவும் செய்யுறாங்க!

தன்னோட வருங்கால கணவருக்காக தனது கால்ஷீட்கள வாரிக் கொடுத்து நடித்து வரும் நம்பர் நடிகை பெரிய நடிகர்களோட படம் இயக்கனும் அவரோட ஆசைய புரிஞ்சிகிட்டு அந்த புராஜெக்டையும் முடிச்சு கொடுத்திருக்கிறாராம். இப்போ அந்த விஷயம் தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்.

அந்த பக்கத்து நாட்டு நிறுவனத்துகிட்ட டாப் நடிகர் படம் கிடைக்க இவ்வளவு தொகை கேட்குறாங்க அப்டினு தெரிஞ்சதும் உடனடியா இந்த தொகைக்கு ஓகே செஞ்சா உங்களுக்கு அந்த படம் கிடைச்சுடும் அப்டினு அந்த நிறுவனத்தோட உரிமையாளர தன்னோட நண்பருக்கு நம்பர் நடிகை போன் செஞ்சு ஐடியா கொடுத்தது தான் இந்த படம் இவ்வளவு சீக்கிரமா அமைய காரணம் அப்டினு சொல்ராங்க!

டாப் நடிகர் படங்கள எப்போ இயக்கப் போறோம் என புலம்பிட்டு இருந்த காதலனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் மாதிரி இந்த படத்த முடிச்சு கொடுத்திருக்காரு நம்பர் நடிகை அப்டினு கோலிவுட் வட்டாரத்துல பேசப்பட்டு வருது.