• Mon. Sep 9th, 2024

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

முடிவு எடுத்தால் முதல்வர் தான் என்ற வாசகத்துடன் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் தமிழக அரசியல் களமே பரபரக்க துவங்கி உள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அவ்வப் போது விஜய் ரகசியமாக அரசியல் ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாகவும், இதனால் விஜய்க்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், மதுரை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள், விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், விஜய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, முடிவெடுத்தால் முதல்வர் தான். 2021 ல் தளபதி (மு.க.ஸ்டாலின்), 2026 ல் தளபதி (விஜய்). 2026ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் போட்டோவிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த போஸ்டரின் மற்றொரு புறத்தில், 2026 அரசியல் ஆலோசகர், தளபதி மக்கள் இயக்கம், தமிழ்நாடு என பிரசாந்த் கிஷோரின் போட்டோவும் போடப்பட்டுள்ளது. விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பிரச்சனையாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் போஸ்டரில் பிரசாந்த் கிஷோரின் போட்டோ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *