• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இனி வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை இணையலாம்..!!

Byகாயத்ரி

Sep 28, 2022

உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார்.வரும்காலங்களில் வீடியோ காலிலும் 32 பேர் வரை இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்தார்.இதுவரை உள்ள வாட்ஸ்ஆப் குரூப் காலில் 8 பேர் வரை தான் பேசமுடியும். ஆனால் இனி 32 பேர் பேசலாம் என்று அறிவித்துள்ளது, மேலும் குரூப் காலில், தொடர்பில்(Contact List) இல்லாத புதிய நபரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.இந்த புதிய அப்டேட் ஆனது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (IOS) என இரு பயனர்களுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.