• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‛இனி நான் தமிழ்ல பேசுறேன்… புரியுதா..’ கெத்துகாட்டிய கனிமொழி

Byமதி

Dec 10, 2021

நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். ‛இனி நான் தமிழ்ல பேசுறேன்… புரியுதா..’ என்று அவர் கேட்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம் பற்றி பேச முற்பட்டார். அப்போது அவர் ஆத்ம நிபார் என்பதை உச்சரிக்க சிரமப்பட்ட.. உடன் இருந்த எம்.பி.க்கள் அதை எடுத்துக் கொடுக்க, சுதாரித்துக் கொண்ட கனிமொழி, அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.

உடனே அவர், ‘பாருங்கள் இது தான் இங்கு பிரச்சனை. இந்தியா பல மொழிகளைப் பேசும் நாடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டீர்கள். நீங்கள் இப்படியான திட்டத்திற்கு ஒன்று ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் இல்லையென்றால் பிராந்திய மொழிகளில் அனைவரும் எளிதில் உச்சரிக்கும்படி பெயர் வைக்க வேண்டும். சரி நான் இங்கு தமிழில் பேசுகிறேன். நீங்கள் புரிகிறதா என்று பாருங்கள். ஆனால், அதற்கு மட்டும் முன் அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்’ என்றார். தமிழில் அவர் பேசியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் மேஜையைத் தட்ட அரங்கமே சில விநாடிக அதிர்ந்தது.

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு பாடம் புகட்டும் வகையில் கனிமொழி எம்.பி. பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.