• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற அறிவிப்பு..!

Byவிஷா

Jan 1, 2024
திருநங்கைகள் முன்மாதிரி விருதுகள் ரூபாய் 1 லட்சம் மற்றும் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களை, awards.tn.gov.in  என்ற இணையத்தளத்தில், பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ம் தேதி அன்று மாநில அளவிலான ஒரு திருநங்கை நபருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும். திருநங்கையர் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் சாதனைகளை, நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு ரூ.1,00,000ஃ- க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். மேற்காணும் தகுதிகள் உடைய திருநங்கையர்கள் 05.02.2024 மாலை 5.45 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.