• Thu. May 2nd, 2024

உணவுப்பொருட்களுக்கு புதிய நடைமுறை அமல்..!

Byவிஷா

Jan 2, 2024

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு (5 கிலோ, 1 கிலோ, அரைக்கிலோ) மொத்த விலையுடன், அதனுடைய சில்லறை விலையையும் குறிப்பிட வேண்டும் என புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.
பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு ‘யூனிட் விற்பனை விலை’ என்ன என்பதை அச்சிட வேண்டும்.
அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ எடையுள்ள கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.
அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும். பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *