• Mon. May 6th, 2024

மத்திய அரசு நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..!

Byவிஷா

Oct 5, 2023

சென்னை அடையாறில் உள்ள மத்திய அரசு நிறுவனமான CLRI-யில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute or CLRI) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை அடையாறில் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள 4 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக காணலாம்.
ஜூனியர் ஸ்டெனோகிராபர் எழுத்து தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 5 பணியிடங்களில் பொது பிரிவினர் 3, ஒபிசி-01, 01-EWS- என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அது மட்டுமன்றி ஸ்டெனோகிராபி திறன் அவசியம். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும். கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..
வயது வரம்பு: 08.10.2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சிஃ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளூம் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பள விவரம்: மத்திய அரசின் பே லெவல் 4-ன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.25,500 முதல் 81,100 வரை சம்பளமாக கிடைக்கும். எழுத்துத்தேர்வு திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தேர்வுகளுமே சென்னையிலேயே நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் வழியாக தெரிவிக்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://jsa.clri.org/ இந்த இணையதள முகவரிக்கு சென்று அங்கு கேக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம்: தேர்வுக்கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சிஃஎஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 8.10.2023 ஆகும். இன்னும் 3 தினங்களே இருப்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *