• Sat. Apr 20th, 2024

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…

Byகாயத்ரி

May 20, 2022

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. முன்பெல்லாம் குறைந்த கட்டணத்தில் இந்த வாகனங்களில் செல்ல முடியும் ஆனால் தற்போது ஓலா ஆப் மூலமாக வாகனங்களை முன்பதிவு செய்யும்போது அவர்கள் சேவையில் காட்டும் கட்டணத்தை காட்டிலும் அதிக அளவு கட்டணத்தை வசூல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சேவைகளில் தொடர்ந்து குறைபாடு இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறி வந்த நிலையில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் சேவைகளில் குறைபாடு, அதிக கட்டணம் உள்ளிட்ட புகார் தொடர்பாக இன்னும் 15 நாளில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *