• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எதுவும்தெரியாது: ஓ.பன்னீர்செல்வத்தை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக நேற்று ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி 78 கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, தெரியாது, தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றார். இதையடுத்து, விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது தெரியாது என ஓ பன்னீர் செல்வம் பதிலளித்ததை வைத்து சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற மீம்ஸ்கள், பதிவுகள் என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். இதனிடையே 2ம் நாள் விசாரணைக்காக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் ஆஜராகி உள்ளார்.