நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 126 வயதான யோகா குரு ஒருவர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி காலில் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் 126 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா விருது பெற வந்தார். அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கால்களில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகா குரு சுவாமி சிவானந்தா, பிரதமர் மோடி காலில் விழுந்தபோது மோடியும் அவரது காலில் விழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.