• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில நபர் கைது…போலீசார் நடவடிக்கை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சித்தம்பலம் பிரிவு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட சிவாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை நடத்திய போது, அவர் கஞ்சா சாக்கலேட் விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த வட மாநில நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.