• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் தவறி விழுந்த வட மாநில சிறுவன்.., உயிரிழந்த நிலையில் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்…

BySeenu

Nov 1, 2023

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர்அமீன் (26), இவர் தனது மனைவி தஸ்லிமா (24), மற்றும் மகன் தமீம் அக்தர் (7), ஆகியோருடன் கோவை மதுக்கரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது தோட்டத்தில் தங்கி அங்குள்ள கோழி பண்ணையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சிறுவன் தமிம் அக்தர் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். மதுக்கரை போலீசார் தீணைப்புத் துறையினருடன் வந்து அங்கிருந்த கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் உடல் கிணற்றில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சிறுவன் கிணற்றின் அருகே இருந்த சீதாப்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது தவறி விழுந்தது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.