• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.