• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தொடங்கியது

Byவிஷா

Jun 3, 2025

தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதன்முதலாக சுயேட்சையாக இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ் ஆகியோரிடம் 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஒருவர், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யும், சேலம், மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 249-வது மனுவாகும். அதே போல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மேட்சல்- மகாஜகிரியைச் சேர்ந்த கண்டே சயன்னா என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.