• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

2023ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

Byவிஷா

Oct 6, 2023


2023 ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ{க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் for his innovative plays and prose which give voice to the unsayable. எனும் புத்தகத்தை எழுதியதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பருப்பொருளில் உள்ள எலக்ட்ரான் இயக்கவியல் தன்மை குறித்த ஆய்வுகளுக்காக Pierre Agostini, Ferenc Krausz , Anne L’Huillier ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது. அதேப்போல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றின் போது, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் அந்தந்த துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மருத்துவத்துக்கான நோபல் பரிசு கொரோனா தடுப்பூசியை கண்டறிந்தவர்களுக்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணுக்களில் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு, கொரோனா வைரசுக்கு எதிராக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்கும் கண்டுபிடிப்புக்காக ஹங்கேரிய அமெரிக்கர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மேன் இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பியர் அகோஸ்டினி, பெரென்ங்க் கிராஸ் மற்றும் அன்னி எல் ஹியூல்லியர் மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்களில் நகரும் போதும், ஆற்றலாக மாறும் போதும் எலக்ட்ரான்களின் இயக்கத்தை, அட்டோசெகண்ட் எனும் மிகமிக குறைவான நேரத்தில் கண்டறியும் ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் உள்ள எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளது. ஸ்டாக்ஹோமில் பரிசை அறிவித்த ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் தெரிவித்துள்ளது.