• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோடி கொடுத்தாலும் நோ! சாய்பல்லவி திட்டவட்டம்!

மலர் டீச்சர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சாய் பல்லவி! பிரேமம் படம் மூலமாக, தமிழகத்திலும் அதிக ரசிகர்களை பெற்றவர்! சாய் பல்லவி, பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி! ஆனால் தற்போது, தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவரை நாடிய அழகு சாதன நிறுவனம் ஒன்று அவர்கள் விளம்பரத்தில் நடித்து கொடுத்தால் 2 கோடி தருகிறோம் என்று கூறியுள்ளனர். எல்லாவற்றையும் கேட்ட சாய்பல்லவி இதில் எனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டாராம். 3 கோடி வரை பேரம் பேசியவர்களிடம், நீங்கள் 5 கோடி கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் சார் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அவர் மறுத்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார். எனது தங்கை கொஞ்சம் மாநிறமாக தான் இருப்பார். அவரிடம் நான், நீ காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட்டால் உனக்கு மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும் என்று கூறினேன். அதைக்கேட்ட அவர் அவர், அவருக்கு பிடிக்காத காய் மற்றும் பழங்ககளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறார். இது அவர் மனதில் ஏற்பட்டுள்ள தாழ்வு மனப்பான்மையை காட்டியது!

பொதுவாக நாம் யாரிடமாவது நீ அழகாக இல்லை என்று கூறினால் அதற்காக, அவர்கள் எந்த விலை வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி. ஆகையால் மக்களிடம் நான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் அதனை கொண்டு செல்ல விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.