இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக்கூடாது என்றும், குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் அதனை குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்க கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு இல்லை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
