• Thu. May 2nd, 2024

சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பில்லை-அமைச்சர் மூர்த்தி விளக்கம்

Byகுமார்

Apr 8, 2024

எந்த இடத்திலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறார்கள் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்து இருக்கிறார்.

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 9 தேதி மதுரை பாண்டிகோவில் அருகே கலைஞர் திடலில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த இடத்தினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் நிச்சயம் வெற்றி பெறுவார்.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் முதலமைச்சரே வேட்பாளர். 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆலோசனை கூட்டங்களில் அதிருப்தியாக பேசியது குறித்த கேள்விக்கு,

கட்சித்தொண்டர்களை உற்சாகபடுத்துவதற்காக, வேகப்படுத்துவதற்காக பேசுகிறேன். கட்சியினர் சிறப்பாக பணி செய்ய வேண்டும், சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு பேசினேன். 40 தொகுதிகளிலும் திமுகவே நிற்கிறது என்ற அடிப்படையில் தேர்தல் பணி செய்ய சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திமுக வேட்பாளருக்கு ஏற்பாடு செய்வதை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்கிறோம். கூட்டணி கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் முழுமையாக திமுகவினர் உழைத்து கொண்டுள்ளோம்.

சு.வெங்கடேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீடியோ குறித்த கேள்விக்கு,

எந்த இடத்திலும் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *