மதுரை சேது பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலின் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மரத்தான் நடைபெற்றது .
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையர் கோபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். .தமுக்கத்தில் இருந்து கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை ஆட்சியர் அலுவலகம் காந்தி மியூசியம் வழியாக தமுக்கத்தில் வந்து நடைபயணம் முடிவடைந்தது. இதில் வாக்கு அளிப்பதின் முக்கியத்தை போற்றும் வகையில் மாணவ மாணவிகள் கையில் பாதுகைகள் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். சேது பொறியியல் கல்லூரி தேசிய சமூக நலத்திட்ட கலகம் சார்பாக நிகழ்வு நடத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு சேது பொறியியல் கல்லூரி தேர்வு ஆணையம் தலைவர் முரளி கண்ணன் சிறப்பு அதிகாரி துரைராஜ் தேசிய சமூக நலத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன் கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணராஜ், பேராசிரியர்கள் சேக்மைதீன், சாகுல் ஹமீத், இளங்குமரன் கலந்து கொண்டனர் .