• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி செல்லப் பிராணிகளுக்கும் காப்பீடு…

Byகாயத்ரி

Jun 2, 2022

மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. மனிதர்களை போலவே நம்முடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம் அதற்கான தொகையை பெற முடியும். ஆபத்தான நோய்களால் இறந்தாலும் காப்பீடு தொகையை பெறலாம்.

செல்ல பிராணிகளின் இனம், அளவு, வயது ஆகியவை பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது.
காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். 7 முதல் 8 தினங்களில் பணத்தை பெறலாம். செல்லப் பிராணியை வளர்க்கும் உரிமையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டுத் திட்டங்களை எடுத்துப் பயன்படுத்த முடியும். செல்லப் பிராணிகளின் வயது, இனம் சார்ந்த சுகாதார நிலைமைகள் மற்றும் நோயின் தீவிரத் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப காப்பீடு எடுக்கலாம். செல்லப் பிராணிகளுக்கான காப்பீட்டின் விலை அதன் தன்மையைப் பொறுத்து வெவ்வேறாக உள்ளது. எனவே செல்லப் பிராணி உரிமையாளர்கள் காப்பீட்டுக் கொள்கை எடுக்க எவ்விதத் தயக்கமும் காட்டாமல் எடுத்துப் பயன்படுத்தலாம்.