• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உங்கள் வீட்டு நாய்க்கும் இனி கொரோனா தடுப்பூசி

ByA.Tamilselvan

Jun 10, 2022

கடந்த 2020ம் ஆண்டுதுவங்கி 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் கொரோனா விட்டபாடில்லை. உலக முழுவதும் குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது.இந்தியா முழவதும் 180 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கிவிட்டது.சில நேரங்களி வீட்டுசெல்லப்பிராணிகளிடம் இருந்துகூட தொற்று பரவ வாய்ப்புள்ளது.
எனவே இனி வீட்டுசெல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடபட உள்ளது. குறிப்பாக வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அமைச்சர் நரேந்திரசிங்தோமர் அறிமுகப்படுத்தினார்.நாய் ,சிங்கம்எலி,முயல்களை டெல்டா ,ஒமைக்ரான் வகை கொரோனாவிலிருந்து பாதுகாக்க் அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். ஆகவே நீங்கள் மட்டுமல்ல இனி உங்கள் வீட்டு நாயும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும்.