• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

என் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம்.., மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!

Byவிஷா

Mar 1, 2023

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எனது பிறந்தநாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள மடலில், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம்; இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்போம் என்பதே தனது பிறந்தநாள் செய்தி என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மாநில உரிமையை தேசிய அளவில் நிலைநாட்டும் ஜனநாயக அறப்பணிக்கு தொண்டர்கள் அளிக்கும் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாக கருதுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.