• Fri. Apr 26th, 2024

கைலாச நாட்டிலிருந்து நேரலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்ட நித்தியானந்தா!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள நித்தியானந்தம் ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தவாறே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தியும், தொடர்ந்து நித்தியானந்தாவின் உத்தரவின்படி தான் சித்திரை திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படியும், மேலும் பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களை வழங்கவும் அறிவுறுதியுள்ளார்.

அதன்படி பிரத்யேக காட்சி பதிவுகள் நித்தியானத்திற்க்கு அனுப்பட்டும், ஆசிரமம் சார்பாக அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டும் பட்டாடைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஆசிரமம் சார்பில் அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டது, அதனை ஏராளமான பெண்கள் கூட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *