

நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சீரியசாக பேசிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், பெண் எம்பியுடன் அரட்டை அடித்தது தற்போது மீம்ஸ் வைரலாகியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர். கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி தொகுதி எம்பியாக இருப்பவர் சுப்ரியா சுலே. இவர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதி சரத் பவாரின் மகள் ஆவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யா உக்ரைன் போர் குறித்து பரூக் அப்துல்லா மிகவும் சீரியசாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் இருந்த சசி தரூரும், சுப்ரியாவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்கள் கையில் சிக்கி, வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலை இணைத்து வீடியோ மீம்ஸாக கிரியேட்டர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பரூக் அப்துல்லா ஆவேசமாக பேசும் காட்சியும், பின்னால் இருவர் அரட்டை அடிக்கும் காட்சியும், பின்னணியில் ஒலிக்கும் ஸ்ரீவள்ளி பாடலும் ரசிக்கும் படி இருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் அடித்துள்ளனர்.
