• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நீலகிரி -மஞ்சூர் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் சிறுத்தை காட்டெருமை மான் பன்றி யானை போன்றவற்றை அவ்வப்போது காண முடிகிறது.


தேயிலை பறிப்பதற்காக தோட்டத்து தொழிலாளர்கள் மஞ்சூர் மின்வாரிய முகாம் தண்டக்கார் லைன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை பறிப்பதற்காக சென்ற பொழுது அங்கு அங்கும் இங்குமாக சிறுத்தை ஓடிக்கொண்டிருப்பதை கண்டு அச்சமடைந்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் குரங்குகள் சத்தங்கள் எழுப்பியவாறு எச்சரிக்கை செய்தது. பின்பு தேயிலை பறிக்க சென்றவர்கள் தோட்டத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றனர் .அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்கூடங்கள் மின்வாரிய அலுவலகம் மின்வாரிய குடியிருப்புகள் காவல் நிலையங்கள் உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி பொதுமக்களும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்