• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு!

டார்லிங், மரகத நாணயம் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடிகை நிக்கி கல்ராணி நடித்து புகழ் பெற்றவர்

தற்போது அவர் விர்ருனு, இடியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி தன்னுடைய வீட்டிலிருந்து 1.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அத்துடன், தன் வீட்டில் பணிபுரிந்த 19 வயதுப் பணியாள் தான் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த விசாரணையில் நிக்கி கல்ராணி வீட்டில் பொருட்களை திருடிய பணியாள் தற்போது விருத்தாசலத்தில் தன்னுடைய வீட்டிற்கு அருகில் பிடிபட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி மற்றும் சில துணிகள் உள்ளிட்டவை மீட்கப் பட்டுள்ளன.