மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை பகுதியில் 5 லட்சம் மதிப்பில்புதிய டிரான்ஸ்பார்மரை வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். செயற் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் சௌந்தர்ராஜன் சோழவந்தான் உதவி இன்ஜினியர் கீர்த்திகா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் விவசாய அணி வக்கீல் முருகன் பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி முன்னாள் பேரூராட்சி செயலாளர் முனியாண்டி கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் சிவா குருசாமி செல்வராணி வார்டு நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன் ரவி திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் ஊத்துக்குளி ராஜாமாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன் சுரேஷ் மற்றும் கண்ணதாசன் கார்த்திக் விவசாய அணி கார்த்தி முட்டை கடை காளி மணி பாண்டி சௌந்தரபாண்டி மாரிமுத்து போர்மேன் ராஜேந்திரன், தவமணி,லைன் மேன் தவமணி, முருகன் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் சோனை உள்பட பலர் கலந்து கொண்டனர்.