• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் புதிய விதிமுறை…

Byகாயத்ரி

Mar 22, 2022

இந்தியாவில் மத்திய மோடி அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்.

இத்திட்டத்தில் வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரையிலும் மானிய உதவி தொகை வழங்கப்படும்.இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் 2022ஆம் ஆண்டுக்குள் கட்டிக் கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வீடுகளை கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது. இதில் “சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நிலையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனாளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஐந்து ஆண்டுகள் வசிக்க வேண்டும். மேலும் குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு முடிந்தவுடன் குத்தகை ஒப்பந்த நீடிக்கப்படும். இந்த நிலையில் திடீரென வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினரின் பெயரில் வீடு மாற்றப்படும் என்றும் வேறு யாருக்கும் வழங்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.