நானே புதிய கட்சிதான்,புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது மாநிலங்களவையில் மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி..

தக் லைஃப் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் செல்வதற்கு நடிகர் கமலஹாசன் சென்னை விமான நிலையம் வந்தார், அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
தக் லைஃப் திரைப்படம் நன்றாக இருக்கும் என நம்பி தான் உங்கள் முன் எடுத்து வந்துள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது மக்களுக்கு பிடிக்கும் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அதனால் சந்தோஷமாக இருக்கிறோம்.
சென்னையில் இருந்து மலேசியா சென்று அங்கிருந்து துபாய் செல்கிறோம் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதன்பின் படம் வெளியாகும் போது இங்கு வந்து விடுவேன்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளீர்கள் என்பது குறித்து கேட்டபோது,
நமது குரல் அங்கே ஒலிக்க வேண்டும் மையத்தின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும் பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்கும்.
நடிகர் விஜய்யின் த வெ க குறித்து கேட்ட பொழுது,
நானும் புதிய கட்சிதான் புது கட்சிகளை விமர்சனம் செய்யக் கூடாது என கூறி புறப்பட்டு சென்றார்.