சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக காவல்துறை பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சைபர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தின் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு சைபர் க்ரைம் போலீசார் தொடர்பு கொண்டு மோசடி நடந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால் மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் பணம் பாதுகாக்க இந்த அவசர உதவி எண் பயனுள்ளதாக உள்ளது.








