• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை -கே. டி .ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

Byதரணி

Mar 17, 2023

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று கட்சியினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பழைய உறுப்பினர் அட்டைக்கு பதிலாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் கூடிய புதிய உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்திலுள்ள சிவகாசி, விருதுநகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அனைத்து சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுக்கு முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் பேரில், கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி அதிமுகவின் புதிய உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, லட்சுமி நாராயணன், ஆரோக்கியம், வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி பகுதி கழக செயலாளர்கள் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி பாண்டியன், சாம் (எ ) ராஜ அபினேஸ்வரன் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் நகரச் செயலாளர் நயினார் முஹம்மது. ஒன்றிய செயலாளர்கள் மச்ச ராசா, கண்ணன், தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் புதிய உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர் படம் விளக்கம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.