• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆஞ்சநேயர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர்..,

ByPrabhu Sekar

Aug 11, 2025

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு வேயும் பணி நிறைவு பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பங்களிப்போடு 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

தேருக்கு பதிக்க 9.5 கிலோ தங்க கட்டிகளை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கி பணியை தொடங்கி வைத்தனர்.