வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் தோன்றும் ‘online’ எனும் வார்த்தையின்மூலம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இந்த அம்சம் தெரியாமல் இருக்க வகைசெய்யும்படி வாட்ஸ்ஆப் செயலி உரையாடல் தளம் அறிவிக்கவுள்ளது.
அம்சங்கள்
• செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிக்கும் விவரத்தை யார் பார்க்கலாம் என்பதை ஒருவர் முடிவுசெய்துகொள்ளலாம்.
• செய்திகள் படமெடுக்கப்படுவதைக் கட்டுப்படுத்தலாம்.
• யாருக்கும் தெரியாமல் உரையாடல் குழுக்களிலிருந்து வெளியேறலாம்.
இந்த புதிய அம்சங்கள் பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ப்ரைவசியை வழங்கும் என்று Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த அம்சம் பயனாளர்களுக்கு மிகவும் உதவிபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.